Enable Javscript for better performance
கந்து வட்டியைக் கட்டுப்படுத்த பா.ஜ.க. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கந்து வட்டியைக் கட்டுப்படுத்த பா.ஜ.க. வலியுறுத்தல்

    By அரூர்,  |   Published on : 24th November 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் நிலவும் கந்து வட்டி கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
     இதுகுறித்து அந்தக் கட்சியின் விவசாய அணி மாவட்டப் பொதுச்செயலர் கே.குழந்தை ரவி, தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு அண்மையில் அனுப்பியுள்ள மனு விவரம்:
     அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பெரும்பகுதி மக்கள் விவசாயத்தையை நம்பியுள்ளனர். நிகழாண்டில் போதிய பருவமழை இல்லை. இதனால் விவசாயப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
     இந்த நிலையில், வாழ்க்கைக்கு தேவையான கடனுதவிகளை பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களில் பெறுகின்றனர். இவர்கள், உரிய நேரத்தில் கடன் தொகையைச் செலுத்தாத நபர்களிடமிருந்து அபராத வட்டி, மீட்டர் வட்டி என கந்துவட்டி வசூல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர். எனவே, அரசு அனுமதியின்றி நிதிநிறுவனம் நடத்துவோர் குறித்து போலீஸார் உரிய கணக்கெடுப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     விவசாயிகள், வணிகர்களுக்கு தேவையான கடனுதவிகளை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai