சுடச்சுட

    

    காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்: ஆட்சியர்

    By தருமபுரி,  |   Published on : 24th November 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்க் கடன் அளிக்க விண்ணப்பித்த 6 நாள்களுக்குள் விவசாயிகளுக்கு கடனை வழங்கிட வேண்டும் என தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
     தருமபுரியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     இக் கூட்டத்திற்கு, தலைமை வகித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விதைகள் வாங்க விவசாயிகளுக்குச் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை அடுத்து விவசாயிகள் பாதிப்படையாமல் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்குத் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்குவதற்காகவும், விவசாயிகளின் வேளாண் சார்ந்த பணிகளுக்கு உதவிடும் வகையிலும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
     தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை, மத்தியக் கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றினைத் துவக்கி, அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க ஏற்பாடுகள் செய்து வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி கடன் மனு அளிக்கும் நேர்வில் 6 நாள்களுக்குள் கடன் வழங்க வேண்டும் என்றார்.
     கூட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கி.ரேணுகா, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai