Enable Javscript for better performance
தொகுதி மக்களிடம் குறைகேட்ட பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ- Dinamani

சுடச்சுட

    

    தொகுதி மக்களிடம் குறைகேட்ட பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ

    By அரூர்,  |   Published on : 24th November 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிப்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.பழனியப்பன் மக்கள் குறைகளை புதன்கிழமை கேட்டறிந்தார்.
     தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பயணிகள் நிழற்கூடம், இந்திரா நினைவு குடியிருப்புகள், பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைகள், கிராமப் பகுதியில் தார்சாலை வசதிகள், புதிய குடும்ப அட்டைகள், தெருவிளக்குகள், அங்கன்வாடி மையத்துக்கு கட்டட வசதிகள், நியாயவிலைக் கடைகளுக்கு கட்டட வசதிகள், சிறுபாலங்கள், அரசு நகர் பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு, உயர் கோபுர மின் விளக்குகள், துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் வசதி, கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடனுதவிகள், சொட்டுநீர் பாசன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.பழனியப்பனிடம் அளித்தனர்.
     இந்தக் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் செய்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சி.கௌதமன், ஊராட்சிச் செயலர் சக்திவேல், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், மணிமேகலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai