சுடச்சுட

  

  அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அழைப்பு

  By தருமபுரி  |   Published on : 25th November 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தருமபுரி மாவட்டம் மொரப்பூரிலுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக பயிற்சி நிலையத்தின் முதல்வர் (பொ) ரா.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி: கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பணியாளர் சங்கங்கள், நகரக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதி சங்கங்கள், நெசவாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றி வருவோர் கூட்டுறவ மேலாண்மைப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
   பல பணியாளர்கள் இன்னமும் இந்தப் பயிற்சியை முடிக்கவில்லை. எனவே, பணியாளர்கள் எளிதில் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சியை முடிக்கும் வகையில், அஞ்சல் வழி மேலாண்மை பட்டயப் பயிற்சி மொரப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
   ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி நடைபெறும். கட்டணம் ரூ.11,500. கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவுப் பணியாளர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.
   பயிற்சியை முடிப்போருக்கு, கூட்டுறவு பட்டயம், நகை மதிப்பீட்டாளர் பட்டயம், கணினிப் பட்டயம் ஆகிய மூன்று பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்படும். டிசம்பர் 17-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். 19-ஆம் தேதி பயிற்சி தொடங்கும். மேலும் விவரங்களுக்கு: 04346-263529, 9865112646.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai