Enable Javscript for better performance
அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.மாணிக்கவாசகம், மாநில துணைப் பொதுச் செயலர் அ.பெரியசாமி, பட்டு வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.பெரியசாமி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலர் கே.மணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
     ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai