Enable Javscript for better performance
குத்துச் சண்டை: லளிகம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    குத்துச் சண்டை: லளிகம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

    By தருமபுரி,  |   Published on : 25th November 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில், லளிகம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
     தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், குத்துச் சண்டைப் போட்டியில், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சுமித்ரா, பிளஸ் 2 மாணவர் பி.மணிகண்டன் ஆகியோர் முதலிடம் பெற்ற்னர்.
     மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர்.நித்தீஷ்குமார், ஆர்.பிரேமா, எஸ்.வெண்ணிலா, ஆர்.அருண்குமார் ஆகியோர் இரண்டாம் இடமும், ஆர்.கார்த்திக், ஜி.வினோத், சி.அனுமந்தன், பி.புவனேஸ்வரி, சி.ஆனந்தலட்சுமி ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்றனர். நீச்சல் போட்டியில் பிளஸ் 1 மாணவர் பி.கவியரசு மூன்றாம் இடம் பெற்றார்.
     இம்மாணவர்களையும், பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியர்கள் சி.திலகவதி, ப.சாக்ரடீஸ், எம்.குமாரசாமி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தங்கவேலு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai