Enable Javscript for better performance
நிலத் தகராறு: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொம்மிடி அருகே நிலத் தகராறு காரணமாக 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை மகன் பொன்னுசாமி (50). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த புஷ்பன் மனைவி சுகுணா (40) ஆகிய 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம்.
     இந்த நிலையில், இருதரப்பினரும் புதன்கிழமை இரவு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொன்னுசாமி, சுகுணா ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், சிக்கம்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை மகன்கள் புஷ்பன் (46), பொன்னுசாமி (50), சின்னதம்பி (55), சின்னதம்பி மனைவி கண்ணம்மாள் (51), பொன்னுசாமி மகன் பழனிசாமி (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai