மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
By தருமபுரி, | Published on : 25th November 2016 08:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தொடக்க விழாவில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேகரன் போட்டிகளுக்கான கொடியேற்றி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி போட்டிகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில் 14, 17, 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. 50மீ, 100மீ ஒட்டப் பந்தயம், இறகுப் பந்து, மென்பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. கை, கால் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், கண் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு வரும் டிச.3-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ந.நஞ்சப்பன், பாரா ஒலிப்பிக் சங்க மாவட்டத் தலைவர் சரவணன், எஸ்.எஸ்.ஏ. உதவி திட்ட அலுலவர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் முனுசாமி, பள்ளி துணை ஆய்வாளர் வி.சீனிவாசன், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.இராஜகோபால், தேசிய நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.