Enable Javscript for better performance
மொரப்பூரில் எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூர் ஒன்றியத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 2011 முதல் 2016-ஆம் நிதி ஆண்டு வரையிலும் செயல்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டப் பணிகள், நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. பி.பழனியப்பன் கலந்தாய்வு செய்து திட்ட மதிப்பீடுகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, நிகழாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
     அப்போது, அரசுப் பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச் சுவர் வசதி, நியாய விலைக் கடைகள், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதி, சிறுபாலங்கள், கழிவுநீர்க் கால்வாய் வசதி, உயர்கோபுர மின்விளக்குகள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான மேசை மற்றும் இருக்கை வசதிகள், கிராமப் பகுதியில் நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அவரிடம் அளித்தனர்.
     இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.சின்னதம்பி, ரவிச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலர்கள் ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன், செட்ரப்பட்டி சி.இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai