சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், காளிப்பேட்டை அருகேயுள்ள நொனங்கனூரில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், சிறுவிவசாயி சான்று, வாரிசு சான்று, விலையில்லா தையல் எந்திரம், ஜாதிச் சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்தல், குடிநீர், சாலை வசதிகள், தெரு விளக்குகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 193 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 140 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
     முகாமில், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட நல அலுவலர் இலாஹிஜான், வட்டாட்சியர் கே.மணி, தனி வட்டாட்சியர்கள் சி.மாறன், அ.ஜெ.செந்தில் அரசன், வட்டவழங்கல் அலுவலர் ஆ.பெருமாள், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     இதேபோல், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டியில் நடைபெற்ற முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 156 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 48 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டாட்சியர் செல்வராஜ், வட்டவழங்கல் அலுவலர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் எஸ்.ரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் என்.ஏழுமலை, வே.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai