Enable Javscript for better performance
ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த வடுகப்பட்டியில், அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
     அரூர் வட்டம், வடுகப்பட்டியில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலங்களை விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்திருப்பதாக புகார்கள் பல வந்தன.
     இதனையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வாலர் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரூர் வட்டாட்சியர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சி.அன்பழகன், வருவாய் ஆய்வாளர்கள் எஸ்.ரமணி, ரஞ்சித்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வடுகப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த கரும்பு, நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai