Enable Javscript for better performance
கோபுரங்களை தனியார்மயமாக்கும் முயற்சி: பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    கோபுரங்களை தனியார்மயமாக்கும் முயற்சி: பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் தர்னா

    By தருமபுரி,  |   Published on : 26th November 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொலைத்தொடர்பு கோபுரங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் தனித்துணை நிறுவனமாக்கும் மத்திய அரசின் கொள்கையைக் கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் வெள்ளிக்கிழமை தருமபுரியில் பிஎஸ்என்எல் ஊழியர்களும், அதிகாரிகளும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.மகேஷ்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்இயு மாநில அமைப்புச் செயலர் எம்.பாபு, மாவட்டச் செயலர் பி.கிருஷ்ணன், தலைவர் டி.பாஸ்கர், அதிகாரிகள் சங்க மாவட்ட உதவிச் செயலர்கள் ஆர்.கோபாலன், ஜி.ரமேஷ், உதவித் தலைவர் எஸ்.அழகிரிசாமி, ஏஐபிஎஸ்என்எல்இஏ மாவட்டச் செயலர் இளந்திரையன், உதவிச் செயலர் எம்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.
     ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.கஜபதி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai