சுடச்சுட

  

  பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்புத் தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை வன்முறை எதிர்ப்பு நடைபயணம் தருமபுரியில் நடைபெற்றது.
   ஒட்டப்பட்டியில் தொடங்கிய நடைபயணத்துக்கு, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம்.சங்கர் தொடங்கி வைத்தார். மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, பொருளர் ராஜம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.
   ஒட்டப்பட்டியில் இருந்து வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நிறைவடைந்தது.
   நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாநிலத்தில் குழந்தைகள் நல ஆணையத் தலைவர், மகளிர் ஆணையத் தலைவர் பதவியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும். இணையக் குற்ற நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். தமிழத்தில் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும். சமூக நல வாரியச் செயல்பாட்டை மேம்படுத்தி விதவைகள், ஆதரவற்றோர், முதியோர் ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai