சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிப்பு

    By தருமபுரி,  |   Published on : 26th November 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வெள்ளிக்கிழமை ரூ.4.92 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
     மாவட்டத்தில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையங்கள், மாவட்ட அளவிலான மாதிரி ஆதார வள மையத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சிப் பள்ளியில் நடைபெற்றது.
     விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, 177 மாணவ, மாணவியருக்கு ரூ.4 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
     அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் கே.சீனிவாசன், மனநல மருத்துவர் மருத்துவர் கற்பகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுகந்தி, மேற்பார்வையாளர் வசுமதி மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai