Enable Javscript for better performance
லாரி கவிழ்ந்ததில் 7 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே தொப்பூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் பொக்லின் ஏற்றி சென்ற லாரி கவிந்ததில் ஏழு பேர் காயமடைந்தனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சேலத்துக்கு பொக்லின் இயந்திரம் ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி, நாகைநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (25) என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரியில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (19), ராமன் (19), அருண்குமார் (19), தினேஷ் (18), மணிகண்டன் (22), திருவாரூரைச் சேர்ந்த ராஜா (25) ஆகியோர் உடன் இருந்தனர்.
     இந்த லாரி, தருமபுரியை அடுத்த தொப்பூர் வனப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ஒரு வளைவில் சென்ற போது, லாரியில் இருந்து பொக்லின் இயந்திரம் திடீர் என சாலையில் சாய்ந்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரியும் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
     இவர்களை, அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் தொப்பூர் போலீஸார் மீட்டனர். இதில் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் மணிகண்டன் பலத்த காயமடைந்தனர். மற்ற 5 பேரும் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
     விபத்து குறித்து தொப்பூர் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து காரணமாக சேலம்-தருமபுரி சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai