Enable Javscript for better performance
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    உடல் உறுப்பு தான விழிப்புணர்வுப் பேரணி தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது .
    அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இப் பேரணியை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடக்கிவைத்துப் பேசியது:
    உடல் உறுப்புகள் தானம், இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் மிக முக்கியமான, புரட்சிகரமான சாதனையாகும். அறிவியல் முன்னேற்றத்தின் பயனை நம் நாட்டினரும் பெற்று பயனடைய வேண்டும் என மத்திய அரசு 1994-ஆம் ஆண்டு மனித உடலுறுப்புகள் மாற்று சிகிச்சை சட்டத்தை இயற்றியது.
    இப்புதிய சட்டம் கண்களை மட்டுமன்றி மற்ற உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இத்தகைய தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருக்கு பார்வை அளிப்பதுடன், பல நோய்களினால் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு நமது பல்வேறு உறுப்புகளைப் பொருத்துவதால், அவர்கள் புதுவாழ்வு பெற வழி செய்யும். சிறுநீரகம் செயலிழப்பிலிருந்து மீளும் கல்லீரல், கணையம், எலும்பு, இருதய வால்வு, தோல் போன்றவைகளை உறுப்பு தானம் செய்து சக மனிதர்களுக்கு உதவலாம் என்றார்.
    பேரணியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், உறைவிட மருத்துவ அலுவலர் ஆர்.சுரபி, கண்மருத்துவப் பிரிவுத் துறைத் தலைவர் இளங்கோவன் உள்பட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக தருமபுரி ரோட்டரி அரங்கம் முன் தொடங்கிய பேரணி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, நெசவாளர் காலனி உள்ளிட்ட சாலை வழியாக மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai