சுடச்சுட

  

  ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான ஜேஆர்சி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கலையரசி வழிகாட்டுதலின்படி, மாவட்ட கல்வி அலுவலர் அ.அகமதுபாஷா அனுமதியின் கீழ் ஒன்றிய அளவில் ஜேஆர்சி பயிற்சி முகாம் 2 நாள்கள் நடைபெற்றது.
  முகாமிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.பொன்னுசாமி தலைமை வகித்தார். முன்னதாக ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் அனைவரையும் வரவேற்றார்.
  முகாமில் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் வி.கணேசன் மேற்பார்வையில் பேரிடர் செயல்முறை வகுப்பு,ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து தலைமையில் அவசர ஊர்தி 108 தொடர்பான முதலுதவி வகுப்புகள், பேரூராட்சி செயல் அலுவலர் சாம்ராஜ் தலைமையில் சுற்றுச் சூழல் தூய்மை குறித்த வகுப்புகள், பேரொளி சதாசிவம் தலைமையில் சிலம்பாட்ட வகுப்புகள் நடைபெற்றன.
  ஜேஆர்சி பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், பார்த்திபன், ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் செஞ்சிலுவை இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகள், உறுதிமொழி தொடர்பான வகுப்புகள் நடைபெற்றன.
  முகாமிற்கு உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.பற்குணன், எம்.நிர்மலா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காரப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன்,மாவட்ட ஜேஆர்சி கண்வீனர் ப.பாலமுருகன், முன்னாள் ஜேஆர்சி கண்வீனர் பன்னீர்செல்வம், ஊத்தங்கரை ரெட்கிராஸ் தலைவர் வி.தேவராசு, துணைத் தலைவர் எம்.ராஜா, செயலாளர் வி.குணசேகரன் உள்பட 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கு.கணேசன்,ஆசிரியர்கள் க.முத்துக்குமார், ஜி.மேகநாதன்,மோ.தரணி ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai