சுடச்சுட

  

  சமூக நல்லிணக்கத்திற்கு வழங்கும் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  தமிழக அரசு ஆண்டுதோறும் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பப் படிவம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முதல் அரசியலமைப்பு நாள் கருத்தரங்கம்
  அரூரில் முதல் அரசியலமைப்பு நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
  நேரு இளையோர் மையம் மற்றும் பீமராவ் ராம்ஜி இளைஞர் விழிப்புணர்வு மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற முதல் அரசியலமைப்பு நாள் கருத்தரங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் சி.அன்பழகன் தொடக்கிவைத்தார்.
  இந்திய அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் ஒரு குடும்பம், ஒரு வங்கி கணக்கு, பாரதிய மகளிர் வங்கி, முன் மாதிரி கிராமம், இந்தியாவில் உருவாக்குதல், திறன் இந்தியா, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், செல்வமகள் சேமிப்பு கணக்கு, இந்திர தனுஷ், வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம், தமிழக அரசின் அரசு நலத் திட்டங்கள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
  நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.திருநீலகண்டன், எம்.சந்துரு, எம்.ஆனந்தசெல்வம், யோகா பயிற்றுநர் எஸ்.சதீஷ்குமார், ஆசிரியர் சி.சரவணன், உதவிப் பேராசிரியர் சி.சுடலைமுத்து, பீமராவ் ராம்ஜி இளைஞர் விழிப்புணர்வு மேம்பாடு சங்கச் செயலர் கே.கனகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai