சுடச்சுட

  

  தருமபுரி குறள்நெறிப் பேரவையின் 128-ஆவது சிறப்புக் கூட்டம் மற்றும் இலக்கிய மன்றத் தொடக்க விழா அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பள்ளியின் தலைமை ஆசிரியர் சி. முனுசாமி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் பெ. தங்கவேல் முன்னிலை வகித்தார். குறள்நெறிப் பேரவையின் செயலர் பே. வெங்கடேசன் அறிக்கை வாசித்தார். பேரவைத் தலைவர் கா. குமரவேல் இலக்கிய மன்றத்தைத் தொடங்கிவைத்தார்.
  அறிவுடைமை என்ற தலைப்பில் சி. தமிழ்தாசன், ஒழுக்கம் உடைமை என்ற தலைப்பில் கா. ராசம்மாள் ஆகியோர் பேசினர். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் இராச ஆனந்தன் வரவேற்றார். முடிவில் ஏ.மு. அர்த்தநாரி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai