Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் நடத்துநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் நடத்துநர் சாவு

    By DIN  |   Published on : 27th November 2016 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொம்மிடி அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார்.
    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (27). இவர், தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவரது நண்பர் ராஜா (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில், பாப்பிரெட்டிப்பட்டி-பொம்மிடி சாலையில் பொம்மிடி நோக்கிச் சென்றார்.
    அப்போது, அந்த சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜா (27) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai