சுடச்சுட

  

  தருமபுரியில் 850 பயனாளிகளுக்கு புதியதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
  தருமபுரி மற்றும் நல்லம்பள்ளியில் குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி, மரக் கன்றுகளை நட்டு பராமரிப்போருக்கு நிதியுதவி வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா ஆட்சியர் கே.விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
  விழாவில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
  850 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மற்றும் 12,407 பயனாளிகளுக்கு ரூ.61 கோடியே 84 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசியது:
  தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி ஆகிய வட்டங்களில் புதிய குடும்ப அட்டை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, 850 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  2016-17-ஆம் ஆண்டிற்கு ரூ.115.20 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 12,407 பயனாளிகளுக்கு ரூ.61.84 கோடி மதிப்பில் பயிர்க் கடன்களும் மற்றும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 446 பயனாளிகளுக்கு ரூ.6.09 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
  இதேபோல, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய வட்டங்களில் ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க 2000 குடும்ப அட்டைகள் தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில், அக்குடும்ப அட்டைகள் உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
  மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கி.ரேணுகா, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.என்.ஏ.கேசவன், துணைத் தலைவர் எம்.கே.வேலுமணி, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், தருமபுரி கோட்டாட்சியர் ராமமூர்த்தி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai