Enable Javscript for better performance
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த கியூபா முன்னாள் பிரதமர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரியில் மெளன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
     பெரியார் சிலை அருகே தொடங்கிய மெளன ஊர்வலம் நகரின் பல பகுதிகள் வழியாக ராஜகோபால் பூங்கா அருகே முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. குமார் தலைமை வகித்தார்.
     மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், எம். மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. இளம்பரிதி, இரா. சிசுபாலன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலர் வே. விசுவநாதன் தலைமை வகித்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
     பென்னாகரத்தில்... பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, வட்டாரச் செயலர் பி. முனியப்பன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந. நஞ்சப்பன், மாவட்டப் பொருளாளர் எம். கோபால், இளைஞர் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் இல. தர்மராஜா உள்ளிட்டோர் பேசினர்.
     காஸ்ட்ரோவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
     அரூரில்... கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அரூரில் ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
     இந்திய கம்யூ.கட்சி சார்பில் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நகரச் செயலர் பா.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபிடல் காஸ்ட்ரோவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
     கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்க்குமரன், ஒன்றியச் செயலர் அல்லிமுத்து, பொருளர் செங்கொடி, நகர பொருளர் சுந்தரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.டி.ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai