Enable Javscript for better performance
காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 28th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
     தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின், தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் சங்கத் தலைவர் கே.துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் சி.எம்.நெடுஞ்செழியன், நிர்வாகிகள் மணி, வளர்மதி உள்ளிட்டோர் பேசினர்.
     கூட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.3,500 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
     மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai