சுடச்சுட

    

    கோழி முட்டைகளை பொரிப்பானில் வைத்துப் பயன்பெற அழைப்பு

    By தருமபுரி,  |   Published on : 28th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி பாப்பாரப்பட்டியிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மின்சாரத்தால் இயங்கும் கோழி குஞ்சு பொரிப்பான் வாங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் நாட்டுக் கோழி முட்டைகளை அதில் வைத்து பயன் பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     120 நாட்டுக் கோழி முட்டைகளை வைத்துப் பொரிக்கும் அளவுக்கான இந்த இயந்திரத்தில் 21 நாள்கள் முட்டைகளை வைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது நாட்டுக் கோழி முட்டைகளை அதிகபட்சம் 10 நாட்கள், வீட்டில் குளிர்சாதனப் பெட்டில் வைத்துப் பாதுகாத்திருக்கலாம்.
     இந்த இயந்திரத்தில் வைத்துப் பாதுகாத்து குஞ்சு பொரித்துக் கொள்ள முட்டை ஒன்றுக்கு ரூ. 5 செலுத்த வேண்டும். முட்டைகளை எடுத்து வரும்போது மேல் ஓடு உடையாமல் கொண்டு வர வேண்டும்.
     மேலும் வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வரும் நோய் மற்றும் குடற்புழுவுக்கு எதிராக நாட்டு மருந்து மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. வெள்ளாடுகளுக்கு தலைச்சேரி மற்றும் போயர் இன விந்து குச்சிகளைக் கொண்டு செயற்கைக் கருவூட்டலும் குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது.
     வேளாண் அறிவியல் நிலையத்திலுள்ள இந்தத் தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: 04342 245860.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai