சுடச்சுட

  

  தேசிய கிராமப்புற வேலைத்திட்ட ஊதிய நிலுவையை வழங்க கோரிக்கை

  By தருமபுரி,  |   Published on : 28th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்தில் வழங்காமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
   தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அண்மையில் நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் எம். சின்னபையன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சோ. அர்ச்சுனன், மாவட்டச் செயலர் எம். முத்து, பொருளாளர் இ.கே. முருகன், சிஐடியூ மாவட்டத் தலைவர் எம். மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
   பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
   60 வயது நிறைவடைந்த அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஏரிகளிலும் தேசிய கிராமப்புற வேலைத் திட்டத்தில் முள் செடிகளை அகற்ற வேண்டும்.
   பனங்கள்ளி, அகரம் ஆகிய கிராமங்களுக்கு மயானம் மற்றும் மயானப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai