சுடச்சுட

  

  பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் சட்ட நாள் விழா

  By தருமபுரி,  |   Published on : 28th November 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நீதிமன்ற வளாகத்தில் உலக சட்ட நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
   மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சி. விஜய்கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
   குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். சந்தானகிருஷ்ணசாமி பொதுமக்களுக்கான இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் உரிமைகள் குறித்து விளக்கமாகப் பேசினார்.
   விழாவில், வழக்குரைஞர்கள் சேகர், ராஜேந்திரன், வேணுகோபால், குமாரசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, காரிமங்கலம் ஒன்றியம் பொம்மஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற சட்ட நாள் விழாவுக்கு வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலர் சாந்தமூர்த்தி வரவேற்றார்.
   வழக்குரைஞர் துரைராஜ், துணை வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளர் சுகந்தி உள்ளிட்டோர் பேசினர். தன்னார்வ சட்டப் பணியாளர் ஜெ.கே. மூர்த்தி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai