சுடச்சுட

  

  முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல் திடீரென ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை தருமபுரியில் இடதுசாரிக் கட்சிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், எம். மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ. குமார், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் த. ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் மின்னல் சக்தி, சாக்கன் சர்மா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலர்கள் ஜே. பிரதாபன், காசி தமிழ்குமரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   பணத் தட்டுப்பாடு சீரடையும் வரை 1000, 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai