சுடச்சுட

  

  ஏடிஎம் சேவைக் குறைபாட்டைக் கண்டித்து திங்கள்கிழமை காலை தருமபுரி பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர்.
   தருமபுரி மாவட்டத்தில் சனி, ஞாயிறு இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வங்கிகளின் முன் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். பெரும்பாலான வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
   குறிப்பாக நெசவாளர் குடியிருப்புக்கு எதிரே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் காலை 9 மணிக்கெல்லாம் பொதுமக்கள் வரிசையில் நின்றனர். அதே வளாகத்தில் 5 ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.
   ஏடிஎம் மையத்தில் நியாய விலைக் கடைகளில் நிற்பதைப் போன்ற வரிசை காணப்பட்டது. ஓரிரு ஏடிஎம் இயந்திரங்களே செயல்பட்டன. சற்றுநேரத்தில் பணம் தீர்ந்தது. பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தினரும் ஒரேயொரு இயந்திரத்தில் மட்டுமே மீண்டும் பணத்தை நிரப்பினர்.
   இதனால் விரக்தியில் இருந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயற்சித்தனர். ஏற்கெனவே அங்கிருந்த போலீஸாரும், வங்கி அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
   சிறிதுநேரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு, மீண்டும் பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை எடுக்கச் சென்று வரிசையில் நின்று கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai