சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
   எனவே, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி- இரு பிரதிகள் எடுத்து வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
   முன்கூட்டியே அளிக்கப்படும் மனுக்களுக்கான பதில்கள் 27ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai