சுடச்சுட

  

  வறட்சியால் காய்ந்துபோன கரும்புடன் வந்த விவசாயி, நிவாரண உதவி கேட்டு மனு அளித்தார்.
   தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஜருகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர்.
   இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் 11 மாதங்களுக்கு முன்பு ஒரு லட்சம் கரும்புப் பயிரிட்டுள்ளார்.
   கரும்பு வளர்ந்து 200 டன் சாகுபடி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் சந்திரசேகர். மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு பயிர் முற்றிலும் காய்ந்துபோனது.
   இதையடுத்து காய்ந்துபோன கரும்புகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வந்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். நேரடியாக அவரிடம் சென்ற விவசாயி சந்திரசேகர், தனது பயிருக்கான நிவாரண உதவி பெற்றுத் தர வேண்டும் என மனு அளித்தார்.
   குறைகேட்பு நாள் கூட்டத்தில் காய்ந்துபோன கரும்புடன் விவசாயி வந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai