Enable Javscript for better performance
தருமபுரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி,  |   Published on : 29th November 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணத்தாள் தட்டுப்பாடுக்கு மாற்று ஏற்பாடு செய்யாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை தருமபுரியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
     தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்பிரமணி தலைமை வகித்தார்.
     திமுக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் பிஎன்பி. இன்பசேகரன், மாவட்டத் துணைச் செயலர்கள் சூடப்பட்டி சுப்ரமணி, முனிராஜ், நாட்டான் மாது, விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜாராம் வர்மா, மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     முன்கூட்டியே திட்டமிடாத மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விரைவில் மக்களுக்கு வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai