Enable Javscript for better performance
மக்கள் குறைகேட்பில் 291 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 291 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
     இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 10,700 மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், தனித்துணை ஆட்சியர்கள் வள்ளி, மல்லிகா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai