சுடச்சுட

  

  லஞ்சம் பெற்ற வழக்கு: நில அளவையருக்கு ஓராண்டு சிறை

  By தருமபுரி,  |   Published on : 29th November 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லஞ்சம் பெற்ற வழக்கில், நில அளவையருக்கு, தருமபுரி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
   தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள பவளந்தூரைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவர், தனக்குச் சொந்தமான நிலத்தை உள்பிரிவு செய்து தரக் கோரி, அப்பகுதி நில அளவையர் சக்தியை தொடர்பு கொண்டார்.
   அப்போது, அவர் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, விவசாயி பெருமாள், ரூ.300-ஐ லஞ்சமாக அளித்துள்ளார். மேலும், ரூ.1000 லஞ்சமாக வழங்க வேண்டும் என்றும், அதில் ரூ.500-ஐ உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நில அளவையர் சக்தி கட்டாயப்படுத்தியுள்ளார்.
   இதுகுறித்து, பெருமாள், தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
   இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனை பேரில், கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நில அளவையர் சக்தியிடம் ரசாயனம் தடவிய ரூ.500 அளித்துள்ளார். அதனைப் பெறும்போது, அங்கிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணராஜ், நில அளவையர் சக்தியை கைது செய்தார்.
   இந்த வழக்குத் தொடர்பான விசாரணை தருமபுரி மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நீதிபதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிடம் லஞ்சம் பெற்ற நில அளவையர் சக்திக்கு இரு பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai