சுடச்சுட

    

    வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைக்கும் முகாம்

    By அரூர்,  |   Published on : 29th November 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக பேரூராட்சி செயல் அலுவலர்கள் மா.ராஜா ஆறுமுகம், அ.அமானுல்லா, ர.சாந்தி ஆகியோர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்த செய்திக் குறிப்பு: அரசு நலத் திட்டங்களை பொதுமக்கள் நேரடியாக பெறும் வகையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைப்பது அவசியம். பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டையின் நகல்களை அளிக்க வேண்டும். ஆதார் அட்டை நகலில் சம்பந்தப்பட்ட நபர் கையெழுத்திட வேண்டும். ஆதார் எண்களை இணைப்பதற்காக அரூர், கடத்தூர், பொ.மல்லாபுரம், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சி அலுவலகங்களில் இற்காக நியமிக்கப்பட்ட பணியாளரிடம் பொதுமக்கள் வங்கிக் கணக்கு புத்தகம் நகல் மற்றும் ஆதார் நகல்களை இணைத்து வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai