வன மகளிர் குழுக்களுக்கு ரூ.6 லட்சம் கடனுதவி
By தருமபுரி, | Published on : 29th November 2016 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வன மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தருமபுரி மாவட்ட வனத் துறை சார்பில் ரூ.6 லட்சம் கடனுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 40 சதம் வனப்பகுதியாக உள்ளது. இதையொட்டி, வனப்பகுதி அருகில் உள்ள கிராமங்களில் வசிப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அப்பகுதியினருக்கு வனத்துறை சார்பில் சுலபத் தவணையில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச் சரகத்தில், காடு வளர்ப்புத் திட்டம் சார்பில், ஆணைக்கட்டி மாரியம்மன் வன மகளிர் மன்றம், பனந்தூர் அம்மன் மகளிர் மன்றம், ஸ்ரீ முருகன் வன மகளிர் மன்றம் ஆகிய மூன்று சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் கடனுதவியை, மாவட்ட வன அலுவலர் க.திருமால் வழங்கினார். பாலக்கோடு வனச்சரகர் ஜெகதீசன், வனத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.