சுடச்சுட

    

    வாரிய உறுப்பினர்கள் வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்: ஆட்சியர்

    By தருமபுரி,  |   Published on : 29th November 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கூறினார்.
     தருமபுரி மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் வாரிய உறுப்பினர்களுக்கு வங்கிச் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     இம்முகாமிற்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில் புரியும் தொழிலாளர்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். இதுவரை, கணக்குத் தொடங்காதவர்களை கண்டறிந்து வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி முகவர்கள் மூலம், சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.
     மேலும், வங்கிக் கணக்கு தொடங்க, சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை, மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சி அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளன. இதனை வாரிய உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, வங்கிக் கணக்கு வைத்துள்ள தொழிலாளர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கில் இணைக்கும் பணியும், இம்முகாம்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.
     இதனைத் தொடர்ந்து, 80 தொழிலாளர்களுக்கு புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது. மேலும், கணக்கு தொடங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
     இம்முகாமில், மாவட்டத் தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பா.கோட்டீஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, அரசு அலுவலர்கள், வங்கி முகவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai