சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த தாமனிகோம்பை கிராமத்தில், "அம்மா' பண்ணை மகளிர் குழு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், அட்மா வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி வரவேற்றார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
     வேளாண்மை துணை இயக்குநர் சேனாபதி, குத்துவிளக்கேற்றி அம்மா பண்ணை மகளிர் குழுவை தொடக்கிவைத்தார். இதனை தொடர்ந்து, இக்குழுவுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டது. அவார்டு தன்னார்வத் தொண்டு நிறுவனச் செயலர் செல்வராஜ், தீர்மானப் பதிவேடு, ரொக்கப் பதிவேடு, கடன் பேரேடு மற்றும் சிறுசேமிப்பு புத்தகம் ஆகியவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார். உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் வசந்தி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai