சுடச்சுட

  

  அரூரில் சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு செய்த சேலம் டி.ஐ.ஜி நாகராஜன், அரூர் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட கோட்டப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள், வழக்கு விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தலைமறைவு குற்றவாளிகளின் விவரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், முக்கியக் கோப்புகள், கொலைகள், தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில் தென்னங்கன்றுகளை டி.ஐ.ஜி. நாகராஜன் நட்டார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.பழனிகுமார், டி.எஸ்.பி. எஸ்.தட்சிணாமூர்த்தி, காவல் ஆய்வாளர் ஜாபர்உசேன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai