Enable Javscript for better performance
இளவரசன் மரண வழக்கு: நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணையம் தருமபுரியில் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இளவரசன் மரண வழக்கு: நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணையம் தருமபுரியில் முகாம்

    By தருமபுரி,  |   Published on : 30th November 2016 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி நத்தம் குடியிருப்பைச் சேர்ந்த இளவரசன் மரணத்தின் காரணம், அதற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் தருமபுரியில் மூன்று நாள்கள் முகாமிட்டுள்ளது.
     தருமபுரி நத்தம் குடியிருப்பைச் சேர்ந்த பி.இளங்கோ என்பவரின் மகன் இளவரசன், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில நாள்கள் கழித்து திவ்யாவின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார், இளவரசன் சார்ந்த சமூக மக்கள் வாழும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடைபெற்றது.
     இந்த நிலையில், கடந்த 2013 ஜூலை 4-ஆம் தேதி தருமபுரி அரசுக் கலைக் கல்லூரிக்குப் பின்புறமுள்ள ரயில் பாதையில் தலையில் அடிபட்ட நிலையில் இளவரசன் பிணமாகக் கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக இளவரசனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
     இளவரசனின் மரணத்துக்கான காரணம் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை
     அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு, ஆணையத்தின் வழக்குரைஞர் செந்தில்நாதன், அரசுத் தரப்பு வழக்குரைஞர் சுப்ரமணி உள்ளிட்டோர் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு முகாமிட்டுள்ளனர்.
     முதல் நாளான செவ்வாய்க்கிழமை இளவரசனின் தந்தை பி. இளங்கோ, ரயில்வே உதவி ஆய்வாளர் விஜயகுமார், முதல் நிலைக் காவலர் வி.ராமன், தடங்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன், கிராம உதவியாளர்கள் பரசுராமன், முனுசாமி ஆகிய 6 பேரும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராயினர்.
     இளங்கோ தவிர்த்த மற்ற 5 பேரும் தங்களது அறிக்கையை உறுதிமொழிப் பத்திரமாக குழுவின் முன் தாக்கல் செய்தனர்.
     சம்பவத்தின்போது பணியில் இருந்த தருமபுரி கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்த இரு மருத்துவர்களுக்கும் புதன்கிழமை ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
     மேலும், இதுதொடர்பாக தனக்குத் தெரிந்த விவரங்களை விசாரணை ஆணையத்தின் முன்பு தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் எம்.பி. இரா.செந்தில் (பாமக) கடிதம் அளித்துள்ளதாகவும், அவரை புதன்கிழமை வரச் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.
     ஒரு மாதம் அவகாசம்: விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகிவிட்டு வெளியே வந்த இளவரசனின் தந்தை இளங்கோ
     கூறியதாவது:
     "ஏற்கெனவே புகார் அளித்தபடி இளவரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணைக் குழுவின் முன்பு தெரிவித்தேன். சந்தேகங்களுக்கான சாட்சிகளுடன் உறுதிமொழிப் பத்திரம் அளிக்கக் கோரினர். வழக்குரைஞர்களைக் கலந்து பேசிவிட்டு அறிக்கையாகத் தருவதாகக் கூறினேன்.
     இதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என்றார் இளங்கோ.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai