Enable Javscript for better performance
பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்

    By தருமபுரி,  |   Published on : 30th November 2016 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு, தருமபுரி மகளிர் நீதிமன்றம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
     தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (எ) மணிவண்ணன் (37). கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2014-இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
     இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
     இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
     இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு இரு பிரிவுகளின் கீழ் ஒரு மாதம் மற்றும் ஒரு வாரம் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதத் தொகையில் ரூ.6 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai