சுடச்சுட

    

    தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக நடத்துவதாகக் கூறி தருமபுரி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
     போராட்டத்துக்கு, சிஐடியூ போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் சி. முரளி தலைமை வகித்தார். காலையில் சிஐடியூ மாவட்டச் செயலர் சி. நாகராஜன் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
     மாவட்டப் பொதுச் செயலர் சண்முகம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். முத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாலையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளனச் செயலர் டி. ஜான்சன்கென்னடி உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசினார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai