Enable Javscript for better performance
இன்று நியாய விலைக் கடைகளில் குறைதீர் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் சனிக்கிழமை (அக்.8) நியாய விலைக் கடைகளில் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாய விலைக் கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள் சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில், வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்-பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளர் ஆகியோர் கலந்துகொள்வர்.
    தருமபுரி வட்டத்தில் எட்டிமரத்துப்பட்டி நியாய விலைக் கடையிலும், பென்னாகரம் வட்டத்தில் நல்லாம்பட்டி, பாலக்கோடு வட்டத்தில் எர்ரனஅள்ளி, அரூர் வட்டத்தில் சங்கிலிவாடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் தாதனூர்புதூர், நல்லம்பள்ளி வட்டத்தில் டி.கானிகரஅள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டத்தில் அடிலம் ஆகிய நியாய விலைக் கடைகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
    இந்த முகாமில், அந்தந்த கடைகளுக்கு உள்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
    நாகர்கூடல் அரசுப் பள்ளியில்
    அறிவியல், கொலு கண்காட்சி
    தருமபுரி, அக். 7: தருமபுரி அருகேயுள்ள நாகர்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் கொலு கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பள்ளி தலைமை ஆசிரியர் கே.திருமுருகன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பி.ராமநாதன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ்.பரிமளா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    களிமண்ணால் செய்த சிலைகள், காய்கறிகளால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள் கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், ராக்கெட் மாதிரிகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தேசிய வன விலங்குப் பூங்கா, காற்றாலைகள், இயற்கையில் கிடைக்கும் அமிலங்களின் பயன்பாடு, மழை நீர் சேகரிப்பு, பீரங்கி அமைப்புகள் உள்ளிட்ட மாதிரிகள் அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக, அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வரலாற்று ஆசிரியர் ஆர்.பரசுராமன் நன்றி கூறினார்.
    ஆணழகன் போட்டி: சிவகாமியம்மாள்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai