Enable Javscript for better performance
காப்புக் காடு ஆக்கிரமிப்பு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே காப்புக்காட்டை ஆக்கிரமித்ததாக இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    பாலக்கோடு வனச்சரகத்துக்குள்பட்ட சொக்கம்பட்டி காப்புக்காடு பகுதியை சிலர் ஆக்கிரமித்து வருவதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    இதனையடுத்து, பாலக்கோடு வனச்சரகர் எஸ்.ஜெகதீசன் தலைமையில், வனவர் சி.செல்வம், வனக்காப்பாளர்கள் கே.சங்கர், எம்.கல்யாணசுந்தரம், என்.சின்னசாமி உள்ளிட்டோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வாழைத்தோட்டப்பள்ளம் வனப்பகுதியில் மோரனஅள்ளியைச் சேர்ந்த வெங்கட்ராமன், கால்வேஅள்ளியைச் சேர்ந்த கோபி ஆகியோர் அத்துமீறி பொக்லின் இயந்திரம் மூலம் காட்டை சுத்தம்செய்து ஆக்கிரமித்தது தெரியவந்தது.
    இதையடுத்து, அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது. மீறி யாரேனும் காட்டை அழித்து ஆக்கிரமிப்புப் பணியில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் க.திருமால் எச்சரித்தார்.


    குண்டர் தடுப்புச் சட்டத்தில்தொழிலாளி கைது
    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    பென்னாகரம் சுண்ணாம்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). தொழிலாளியான இவர், தனது 8 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில், அண்மையில் பென்னாகரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    இந்த நிலையில், கோவிந்தராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி காங்காதர், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனுக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் பேரில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

    ஊத்தங்கரை அருகே விஷமருந்தி பெண் தற்கொலை
    ஊத்தங்கரை அருகே பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்பாடி ரெட்டிவலசையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் விவசாயி. இவருடைய மனைவி தாமரைச்செல்வி (36). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். தாமரைச்செல்வி தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 1-ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கியுள்ளார்.
    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai