Enable Javscript for better performance
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க இந்திய கம்யூ. கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க இந்திய கம்யூ. கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 3 மாதங்களாக பெய்திருக்க வேண்டிய பருவ மழை பெய்யாமல் போனதால், தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு விட்டன. மானாவாரி நிலங்களிலும், இதர நிலங்களிலும் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி சேதமாகி விட்டன.
    சாமை, ராகி, கம்பு, வரகு, சோளம், அவரை, துவரை, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அடுத்த ஆண்டின் விதைப்புக்கான விதை தானியம் கூட வந்து சேராததால் தவித்து வருகின்றனர்.
    கால்நடைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீவனமும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடும் மன வேதனையில் உள்ளனர்.
    வாழ்வாதாரம் பாதித்ததால் பலரும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி கிளம்பி விட்டனர்.
    எனவே தமிழக அரசு தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும். பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்களுக்கு தருமபுரி மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai