Enable Javscript for better performance
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி/அரூர்,  |   Published on : 15th October 2016 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஒன்றிய செயலர் என்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் ஏ.குமார் செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலர் ஜி.லெனின் ஆகியோர் பேசினர்.
     இதேபோல, நல்லம்பள்ளியில் ஒன்றிய செயலர் கே.குப்புசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இண்டூர் பகுதி குழுச் செயலர் பி.டி.அப்புனு, பாலக்கோட்டில் ஒன்றிய செயலர் சி.ராமன், பென்னாகரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், பாப்பாரப்பட்டியில் பகுதி செயலர் வே.விசுவநாதன், ஏரியூரில் பகுதி செயலர் குமார், காரிமங்கலத்தில் ஒன்றிய செயலர் கே.முருகேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
     இதில், தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, நிவாரணப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். கருகிய வேளாண் பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     அரூரில்...
     வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலர் ஆர்.நடராசன் தலைமை வகித்தார்.
     இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     இதில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி.சின்னராசு, பி.குமார், வட்டக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன், கே.என்.ஏழுமலை, பி.வி.மாது, ஆர்.மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai