சவூதியில் ஹீமோ டயாலிசிஸ் பணிக்கு செவிலியர்கள் தேவை

சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஹீமோ டயாலிசிஸ் பிரிவில் பணியாற்ற பிஎஸ்ஸி அல்லது பட்டயப் படிப்பு முடித்த
Published on
Updated on
1 min read

சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஹீமோ டயாலிசிஸ் பிரிவில் பணியாற்ற பிஎஸ்ஸி அல்லது பட்டயப் படிப்பு முடித்த செவிலியர்கள் 150 பேர் தேவைப்படுவதாகவும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
 இவர்களுக்கான நேர்காணல் வரும் மே 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் சென்னை கிண்டியிலுள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலிலும், மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் பெங்களூரு இன்பேன்டரி சாலையிலுள்ள மோனார்க் லக்சர் ஹோட்டலிலும் நடைபெறவுள்ளது.
 தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.55 ஆயிரம் மாத ஊதியம், இலவச தங்குமிடம், விமான டிக்கெட், உணவு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவை வழங்கப்படும்.
 விருப்பமும், தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் வரும் 19-ஆம் தேதிக்குள் ர்ம்ஸ்ரீங்வ்049ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 044 22505886, 22502267, 8220634389.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com