எஸ்எஸ்எல்சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வெழுதி 497, 496 மதிப்பெண்கள் எடுத்த தலா ஒரு மாணவர்களையும்,
Updated on
1 min read

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வெழுதி 497, 496 மதிப்பெண்கள் எடுத்த தலா ஒரு மாணவர்களையும், 495 மதிப்பெண்கள் எடுத்த 3 மாணவிகள் மற்றும் இரு மாணவர்களையும் பள்ளியின் தாளாளர் கந்தசாமி, நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 இப்பள்ளியில் 26 பேர் கணிதத்திலும், 56 பேர் அறிவியலிலும், 89 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
 மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 125 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 189 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 241 பேரும் பெற்றுள்ளனர்.
 கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக். பள்ளி
 இந்தப் பள்ளி மாணவர் 497 மதிப்பெண்களும், மூன்று பேர் 496 மதிப்பெண்களும் பெற்றனர். 5 பேர் 495 மதிப்பெண்களும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாகிகள் பாராட்டினர்.
 உப்பாரப்பட்டி அரசுப் பள்ளி
 ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மாணவர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 10 பேர் அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். ரவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமச்சந்திரன், கிராமக் கல்விக்குழுத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 பிளஸ் 2 தேர்வில் எம்.டி.வி. பள்ளி
 பிளஸ் 2 தேர்வில் இந்தப் பள்ளி மாணவர் 1,158 மதிப்பெண்களும், மாணவிகள் இருவர் 1,150 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளியின் முதல்வர் காளிமுத்து, நிர்வாக அலுவலர் துரைசாமி, தலைவர் ராமச்சந்திரன், தாளாளர் பாஸ்கரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
 அரூர், பி.டி.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி
 இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரூரை அடுத்த செக்காம்பட்டி பி.டி.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இந்தப் பள்ளி மாணவர்கள் 496, 495, 494 ஆகிய மதிப்பெண்களுடன் பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். கணிதத்தில் 17 பேர், அறிவியலில் 11 பேர், சமூக அறிவியலில் 11 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பி.டி.ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் தலைவர் இரா.தமிழ்மணி, இயக்குநர் டி.பத்மாவதி தமிழ்மணி, நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், பள்ளி முதல்வர் ஆர்.பி.ராஜசேகரன், துணை முதல்வர்கள் வி.மணிமொழி, சி.இ.வினிதா சாமுவேல் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com