சுடச்சுட

  

  "பாரம்பரிய மாட்டினங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்'

  By தருமபுரி,  |   Published on : 02nd January 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரம்பரிய மாட்டு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, எருதாட்டம் போன்ற வீர விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தருமபுரியைச் சேர்ந்த வீர மறவா விளையாட்டுப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
   தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இப்பேரவையின் சார்பில் ஆலம்பாடி மாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், ஆலம்பாடி மாடுகள் காட்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.
   மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சர்க்கார் பாபாஜி, கோவை விலங்கு நல ஆர்வலர் பாலகுமார் சோமு, மதுரை மாவட்ட மாடு
   பிடிக்கும் வீரர் சங்கச் செயலர் முடக்கத்தான் மணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
   தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட ஆலம்பாடி மாடுகளில் சிறந்த மாடுகளுக்கும், மாடு வளர்ப்போருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
   பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சர்க்கார் பாபாஜி செய்தியாளர்களிடம் கூறியது:
   தருமபுரி மாவட்டத்தின் பாரம்பரிய மாட்டினம் ஆலம்பாடி மாடுகள். இதேபோல, பர்கூர் மாடு, புலியகுளம் மாடு போன்றவை பிரபலமானவை. இவை தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன.
   தமிழ்நாட்டின் முக்கியமான மரபு மாடான காங்கேயம் ஒரு காலத்தில் 10 லட்சம் எண்ணிக்கையில் இருந்தன. தற்போது வெறும் 80 ஆயிரம் மாடுகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
   எனவே, நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, எருதாட்டம் போன்ற வீர விளையாட்டுகளை இந்தப் பொங்கல் பண்டிகைக்கு நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார் பாபாஜி.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai