சுடச்சுட

  

  மீன் வளர்ப்புக்காக சோலார் அமைப்புகளை ஏற்படுத்த மானியம்

  By தருமபுரி,  |   Published on : 02nd January 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கான சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்த 50 சதம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   தமிழ்நாடு அரசு மீன் வளத் துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன் வள மேலாண்மை மற்றும் நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன் வளர்ப்புக் குளங்களில் சூரிய ஒளி மின் சக்தி மூலம் இயங்கும் மோட்டார், காற்றுப் புகுத்தி மற்றும் விளக்குகள் அமைக்க ஆகும் செலவினத் தொகை ரூ. 15 லட்சத்தில் 50 சதவிகிதமான ரூ. 7.50 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
   இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம். அதிகம் பேர் விண்ணப்பித்தால் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களுக்கும், மேலும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
   மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம், ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai