சுடச்சுட

  

  வாணியாற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வலியுறுத்தல்

  By அரூர்,  |   Published on : 02nd January 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூர் அருகே வாணியாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பறைப்பட்டி புதூர் ஊராட்சிக்குள்பட்டது கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை. இந்த கிராமத்தில் 700-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வாணியாற்றின் கரையில் அருள்மிகு ஸ்ரீ வாணி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் எதிரே கிராமப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள் உள்பட அனைத்து வகையான கழிவுகள், குப்பைகள் வாணியாற்றின் கரையில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் நாள்தோறும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் வாணியாறு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai